குறிப்பிட்ட சில தகவல்கள் தமிழில்

தொடக்கப் பக்கம்  »  குறிப்பிட்ட சில தகவல்கள் தமிழில்  »  சமூக ஈடுபாட்டுத் திட்டம் பற்றி  »  சமூக ஈடுபாட்டுத் திட்டம் (CEP)என்றால் என்ன?
  சமூக ஈடுபாட்டுத் திட்டம் பற்றி
  முக்கியமானவை
  செய்தி அறை
  பன்னூடகக் கூடம்
  வெளியீடுகள்
  வலையொலி / வலையொளி
 
சமூக ஈடுபாட்டுத் திட்டம் (CEP)என்றால் என்ன?

சர்ச்சைகளைக் குறைக்கக்கூடிய மக்கள் கட்டமைப்பு
சமூக ஈடுபாட்டுத் திட்டம், அனைத்து நிலைகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்களை ஒன்றுதிரட்டி, பயங்கரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடி நிலைகளில் நமது சமூகத்தில் இன, சமயச் சர்ச்சைகளைத் தடுக்கக்கூடிய புரிந்துணர்வை வளர்க்க உதவும்.

பயங்கரவாதத் தாக்குதல்களைச் சமாளிக்கக்கூடிய திட்டங்கள்
பயங்கரவாதத் தாக்குதல் நேர்ந்தால் அதைச் சமாளிக்கும் திட்டங்களில் சமூகத்தினர் ஈடுபடலாம். சிங்கப்பூரர்கள் நெருக்கடி நிலையைச் சமாளிக்கவும், ஒரே நாடாக ஒன்றுபட்டிருக்கவும் இத்திட்டங்கள் உதவும்.

நெருக்கடிகால பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் மட்டுமல்ல
பயங்கரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடி நிலையின்போது, வெவ்வேறு சமூகத்தினரிடையில் புரிந்துணர்வின்மையும் மனக்கசப்பும் உருவாகக்கூடிய வாய்ப்புண்டு. நெருக்கடி நிலையின்போதும் அதற்குப் பிறகும் நமது பல இன சமூகத்தினர் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் வாழவும், தொடர்ந்து அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வேலை செய்து, படித்து, வாழ்க்கை நடத்தவும் சமூக ஈடுபாட்டுத் திட்டம் உதவும்.

 

 

மீண்டும் மேலே போக