குறிப்பிட்ட சில தகவல்கள் தமிழில்

தொடக்கப் பக்கம்  »  குறிப்பிட்ட சில தகவல்கள் தமிழில்  »  சமூக ஈடுபாட்டுத் திட்டம் பற்றி  »  இதில் யார் ஈடுபட்டிருக்கிறார்கள்?
  சமூக ஈடுபாட்டுத் திட்டம் பற்றி
  முக்கியமானவை
  செய்தி அறை
  பன்னூடகக் கூடம்
  வெளியீடுகள்
  வலையொலி / வலையொளி
 
இதில் யார் ஈடுபட்டிருக்கிறார்கள்?

உங்களால் ஒரு மாற்றத்தைச் செய்ய முடியும்
ஒன்றுபட்ட, உறுதியான சமூகத்தை அரசாங்கக் கொள்கையால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. உங்கள் பங்கும் மிக மிக முக்கியம். சமூக ஈடுபாட்டுத் திட்டத்தின்கீழ் பந்தங்களைப் பலப்படுத்தி, நம்பிக்கை உறவை வளர்க்க சமூகத்தினர் பற்பல நடவடிக்கைகளை நடத்தலாம். அதே சமயத்தில், இந்த முயற்சிகளை அரசாங்கம் ஒருங்கிணைத்து, ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான திரு வோங் கான் செங் தலைமையில் செயல்படும் சமூக ஈடுபாட்டுக்கான அமைச்சர்நிலைக் குழு இத்திட்டத்தை ஏற்று நடத்துகிறது. ஆறு அரசாங்க அமைப்புகள் இத்திட்டத்திற்கு ஆதரவு தருகின்றன. உள்துறை அமைச்சு ஒருங்கிணைப்புப் பொறுப்பை ஏற்றிருக்க, பின்வரும் ஐந்து சமூகக் குழுமங்களுக்கு அந்தந்த அமைப்புகள் ஆதரவளிக்கும்.

குழுமம் ஆதரவளிக்கும் அமைப்பு
சமயக் குழுக்கள், குலமரபுச் சங்கங்கள் மற்றும் தொண்டூழிய அறப்பணி அமைப்புகள் சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டுத் துறை அமைச்சு
கல்விக் கழகங்கள் கல்வி அமைச்சு
தகவல் சாதனங்களும் கலையும் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சு
தொழில் நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் மனிதவள அமைச்சு
அடித்தள அமைப்புகள் மக்கள் கழகம்

ஒவ்வொரு குழுமத்திலும் இடம்பெறும் அமைப்புகள் தங்களுக்கு இடையிலும் மற்ற குழுமங்களுடனும் ஒத்துழைத்து, வலுவான கட்டமைப்புகளையும் பந்தங்களையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

 

 

மீண்டும் மேலே போக