Why the need for CEP?

Home  »  About CEP  »  சமூக ஈடுபாட்டுத் திட்டம் (CEP)ஏன் தேவைப்படுகிறது?

சிங்கப்பூர் பயங்கரவாத மிரட்டல்களை எதிர்நோக்குகிறது
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலும், அதைத் தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும், பயங்கரவாதத்திற்குச் சமயத் தீவிரவாதப் போக்குடன் பெருமளவு தொடர்பிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன. இதுபோன்ற தாக்குதல்களால் உயிரும் உடமைகளும் அழிவதோடு மட்டுமல்லாது, வெவ்வேறு சமூகத்தினரிடையில் நிலவும் நம்பிக்கை, நல்லெண்ணம், நல்லிணக்கம் ஆகியவையும் அழிக்கப்படக்கூடும்.

சிங்கப்பூரில் வெடிக்குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காக ஜெமா இஸ்லாமியா (JI) உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும், பாலியில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களும், இந்த வட்டாரத்தில் பயங்கரவாதம் நீண்டகால மிரட்டலாக இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பயங்கரவாதிகள் சிங்கப்பூரைத் தாக்கினால், சமூக உறவுகள் மீதான பாதிப்பைக் கட்டுப்படுத்த நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துத் தயாராக இருப்பது அவசியம். நாம் இன்று அனுபவிக்கும் நம்பிக்கையும் நல்லெண்ணமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றெண்ணி வாளாவிருக்கக்கூடாது.